Get Mystery Box with random crypto!

சென்னையில் 'இயல்வாகை' நடத்தும்.. சீர்தானிய மரபு திண்பண்டங்கள் | Healer Baskar Followers

சென்னையில் 'இயல்வாகை' நடத்தும்..

சீர்தானிய மரபு திண்பண்டங்கள் செய்முறை பயிற்சி

ஊத்துக்குளியில் நடைபெற்றதை தொடர்ந்து , சென்னையில் நடத்த கேட்டுக் கொண்டதற்கிணங்க சென்னையில் இனிப்பு, மற்றும் கார வகைகளுக்கு இரண்டு நாள் பயிற்சியாக ஏற்பாடு செய்திருக்கிறோம்..

18/12/21 - சனி - இனிப்பு வகைகள்

19/12/21 - ஞாயிறு - கார வகைகள்

காலை 10 மணி முதல்
மாலை 4 மணி வரை.

நம் குழந்தைகளை ரசாயனங்கள் கலந்த பாக்கெட் தீனிகளில் இருந்து விடுவித்து
மரபு ரக உணவுகளில் குழந்தைகளுக்கு சுவையான திண்பண்டங்களைத் தர
நினைக்கும் பெற்றோர்களுக்கும்,

சீர்தானியங்கள், மரபு ரக அரிசி வகைகள் குறித்த விழிப்புணர்வும், பயன்பாடும் பெருகி வரும் நிலையில்
வீட்டிலிருந்தபடியே சீர் தானிய திண்பண்டங்கள் தயாரித்து பொருளீட்ட விரும்புபவர்களுக்கும்
சிறந்த வாய்ப்பு..

செயல்முறை பயிற்சியாக

இனிப்பு வகைகள்:
கருப்பட்டி பூந்தி லட்டு,
கருப்பட்டி ஜிலேபி,
கருப்பட்டி அல்வா,
தினை அல்வா,
கம்பு லட்டு,
தினை லட்டு,
கருப்பு உளுந்து லட்டு,
பச்சைப்பயறு லட்டு,
கேழ்வரகு லட்டு,
நிலக்கடலை உருண்டை,
எள்ளுருண்டை,
அதிரசம்,
கருப்பட்டி மைசூர் பாகு
வெள்ளைச் சர்க்கரை சிறிதளவுமின்றி மிகசுவையான இனிப்பு தயாரிக்கும் நுட்பங்கள்

பயிற்றுநர்:
திரு. அன்பழகன்
Ceelam Sweets & Bakers
சென்னை.

திரு. அன்பழகன் அவர்கள் 35 வருடங்களாக இனிப்புகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பழுத்த அனுபவமும், மிகச் சரியான பக்குவமும் கைவரப் பெற்ற இவரது கருப்பட்டி இனிப்புகள் இதுவரை எங்கும் சுவைத்திராத அளவு தனித்துவம் வாய்ந்தது.

முப்பது வருட
பாரம்பரியம் மிக்க, கருப்பட்டி இனிப்புகளுக்கு புகழ் பெற்ற சென்னை சீலம் பேக்கர்ஸ் ன் சிறுதானிய இனிப்புகள் இவரது பக்குவத்தில் உருவானவை.

தனது முதிர்ந்த அனுபவத்தில் பெற்ற, கற்ற செயல்முறை நுட்பங்களை நமக்கும் கற்றுத் தருகிறார்.

கார வகைகள்: 19/12/21- ஞாயிறு

மாப்பிள்ளை சம்பா அரிசி மிளகு தட்டுவடை,
ராகி முடக்கத்தான் ஓலை பக்கோடா,
தினை மிக்சர்,
தக்காளி மிக்சர்,
புதினா மிக்சர்,
முறுக்கு வகைகள்:
இளநீர் முறுக்கு,
செவ்வாழை முறுக்கு,
சின்ன வெங்காய முறுக்கு,
பாலக்கீரை முறுக்கு,
சின்ன வெங்காய முறுக்கு,
புதினா முறுக்கு,
கறிவேப்பிலை முறுக்கு,
கருப்பட்டி முறுக்கு,
மூலிகை முறுக்கு வகைகள்:
வல்லாரை முறுக்கு,
தூதுவளை முறுக்கு,
முடக்கத்தான் முறுக்கு

உள்ளூர் விற்பனை மற்றும்
ஏற்றுமதியின்போது பாக்கெட்டில் அடைக்கப்படும் தீனிகள்
நீண்ட நாட்களுக்கு (Storage ல்) மொறுமொறுப்பு குறையாமலும், எண்ணெய் சிக்கு வாடை வராமல் இருப்பதற்கான தயாரிப்பு நுட்பங்கள்,

தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கான விற்பனை வாய்ப்புகள்.

பயிற்றுநர்:
"நம்ம ஊரு சந்தை " யின் பெருமை மிகு பங்கேற்பாளர்
திரு.கணேசன் - Cavery foods,
பரமத்தி வேலூர்.

திரு. கணேசன் அவர்கள் சீர்தானியம், மரபு அரிசி வகைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திண்பண்டங்களை சுவையாக ( சமையல் சோடா, நிறமூட்டி, சுவையூட்டி எதுவுமில்லாமல்) தயாரிப்பதிலும், அதன் நுட்பங்களை பிறருக்கு பயிற்றுவிப்பதிலும் வல்லவர்..

நம்ம ஊரு சந்தையில், 2019 ல் ஆரம்பித்து இப்போது வரை, தன் திண்பண்டங்களுக்கென பெரும் வாடிக்கையாளர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருப்பவர்..

இவரின் தயாரிப்புகள் உள்ளூர் இயற்கை அங்காடிகளில் பெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது வெளிநாடுகளுக்கும் வெற்றிகரமாக ஏற்றுமதி செய்கிறார்.

வீட்டில் இருந்து தொழில் தொடங்க விரும்புவர்களுக்கு பயிற்சியும், ஆலோசனையும், விற்பனை வாய்ப்புகளும் அளிக்கிறார்.

பயன் பெற விழைவோர்
முன்பதிவுக்கு : 9942118080

பயிற்சி பங்களிப்பு :
ஒரு நாளைக்கு : ரூ.600/-
இரு நாட்களுக்கும் : ரூ.1000/-

(பயிற்சியின்போது மதிய உணவு, தேநீர் வழங்கப்படும்)

இடம்:
ஸ்ரீ ரமண வித்யாலயா பள்ளி,
எண்: 6, பிரதான சாலை,
கல்யாண நகர், தாம்பரம்,
சென்னை.

நல்உணவு,
நல்லுடல்,
நல்வாழ்வு.

நண்பர்களுக்கும் பகிருங்கள்..

இயல் வாகை
Ashok Kumar