Get Mystery Box with random crypto!

http://m.tamil.thehindu.com/opinion/columns/ஏன்-மாட்டைக்-கையில | Flash news 24*7 Tamil

http://m.tamil.thehindu.com/opinion/columns/ஏன்-மாட்டைக்-கையில்-எடுக்கிறார்கள்/article9720059.ece



இன்றைக்கு ஒரு விவசாயி மாடு வளர்க்கிறார் என்றால், குறைந்தது 10 வருஷம் அது பால் கொடுக்கும், இடையில் அது கன்று போடும் அந்தக் கன்று பசுவாக இருந்தால் வளர்ப்புக்கு, காளையாக இருந்தால் இறைச்சிக்கு அப்புறம் கடைசியாக தாய் மாடும் அடிமாட்டுக்கு என்ற கணக்கிலேயே வளர்க்கிறார்கள். இப்படியெல்லாம் இல்லாமல், ஒரு மாட்டுக்கு அன்றாடம் ரூ.100-ரூ.200 செலவிட்டு ஒரு லிட்டர் பாலை ரூ.30 கொள்முதல் விலைக்கு விற்று ஒரு விவசாயி காலம் தள்ள முடியாது. ஆக, மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களே மறைமுகமாக மாடுகள், மாடு வளர்ப்பு, குறைவான பால் விலைக்கு உதவுகிறார்கள் என்பதே இன்றைய யதார்த்தம்.


நிறையக் காரணங்கள் பேசப்படுகின்றன. மாட்டிறைச்சித் தொழிலில் கணிசமான எண்ணிக்கையில் ஈடுபட்டிருக்கும் முஸ்லிம்களின் பொருளாதாரத்தைச் சீர்குலைப்பதில் தொடங்கி, சிறு குறு விவசாயிகள் ஆதிக்கத்தில் இருக்கும் இந்திய மாடு வளர்ப்புத் தொழிலைப் பெருநிறுவனங்களின் களமாக்குவது வரை இருக்கலாம். இவை எல்லாவற்றையும் தாண்டி இரு முக்கியமான அரசியல் நோக்கங்கள் பாஜகவுக்கு இருப்பதாக நான் கருதுகிறேன். 1. கவனத் திசைத் திருப்பல், 2. எதிர்மறை அணித்திரட்டல்!