முக்கிய நடப்பு நிகழ்வுகள் !! நவம்பர் 28 1)மெரினா கடற்கரைய | TNPSC100
முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!
நவம்பர் 28
1)மெரினா கடற்கரையில் 'சிங்கார சென்னை 2.0' திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதையை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
2)காசநோய் இல்லாத இந்தியா திட்ட பிரச்சாரத்திற்கான தேசிய தூதராக தீபா மாலிக் நியமிக்கப்பட்டுள்ளார்.
3)சங்கீத நாடக அகாடமி புரஸ்கார் விருதுக்கு 128 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
4)அடுத்த ஆண்டில் செயற்கைக்கோள்களை பாதி செலவில் விண்ணில் செலுத்த ஹைதராபாத்தைச் சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்கைரூட் திட்டமிட்டுள்ளது.
5)இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா, அதிக பார்வையாளர்கள் வருகைக்காக அகமதாபாத், நரேந்திர மோடி ஸ்டேடியம் "கின்னஸ் உலக சாதனை" படைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
6)ஆந்திராவில் புதிய சாலை பணிகளுக்கான திட்டத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தொடங்கி வைக்கிறார்.
7)அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவிண்வெளியில் கருந்துளையைச் சுற்றியுள்ள ஒளி எதிரொலிகளை ஒலி (சத்தம்) அலைகளாக மாற்றியுள்ளது.
8)ஆசிய ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர் ஹர்ஷவர்தன் தங்கம் வென்றார்.